Home  |  திரை உலகம்

வலியுடன் ஒரு காதல் ( Valiyudan Oru Kadhal )

வலியுடன் ஒரு காதல் ( Valiyudan Oru Kadhal )

Movie Name: Valiyudan Oru Kadhal வலியுடன் ஒரு காதல்
Hero: Kevin
Heroine: Gowri Nambiar
Year: 2014
Movie Director: Sanjeevan
Movie Producer: Matha's Blessing Studios


கதிர் என்னும் வெட்டி ஆபீஸர் , ஊரில் தேங்கா தோப்பு, பூசணிக்கா தோட்டம் என்று ஒரு இடம்விடாமல் தனது நண்பர்களுடன் சென்று திருடும் பழக்கமுடையவர். திருடுவதற்கு இன்றைக்கு எதுவுமே கிடைக்கவில்லையா..? நிலத்தைச் சுற்றி போட்டிருக்கும் கம்பி வலையைக்கூட அறுத்துக் கொண்டு போய் எடைக்கு எடை போடும் அளவுக்கு உத்தமர். இந்த கதிர் கண் பார்வையில் படுகிறார் யசோதா. அந்த ஊர் பண்ணையாரான சரவணப் பொய்கையின் ஒரே மகள். சரவணப் பொய்கை ரவுடிக்கு ரவுடி.. இந்த யசோதாவுக்கு ஒரு முறை மாப்பிள்ளை வீட்டோடு தயாராகவே இருக்கிறான். இதில் நமது ஹீரோ இடையில் நுழைந்து நூல் விடுகிறார்.

இது தெரிந்து யசோதாவின் முறை மாப்பிள்ளை ஹீரோவை அழைத்து துவைத்து எடுத்து காயப் போட்டு அனுப்பி விடுகிறார். இதனை பார்த்தவுடன் வழக்கம்போல ஹீரோயின் யசோதாவுக்கு காதல் உணர்வு பீறிட்டு வர.. ஒரு காதல் பாட்டுக்கு சிச்சுவேஷன் கிடைச்சிருச்சு.. மறுபடியும் காதல் துளிர்விட்டிருச்சு என்பதை அறிந்து ஹீரோவின் வீட்டுக்கு ஆள் அனுப்பி வீட்டையே துவசம் செய்கிறார்கள். ஆனாலும் காதல் இன்னமும் பெவிகால் போட்டு ஒட்டியது போலவும் ஆகிறது..
ஹீரோயின் தனக்கு போடப்பட்ட கட்டுக்காவலை மீறி செங்கல் சூளைக்கு ஹீரோவை வரச் சொல்கிறாள். ஹீரோவும் அங்கே போக.. ஒரு ரொமான்ஸ் பாடல். தெரியாத்தனமாக முறை மாப்பிள்ளை தாக்கியதில் ஹீரோயின் மயக்கமாகிறாள். என்ன செய்வது என்பது தெரியாமல் ஹீரோயின் இறந்துவிட்டாள் என்று பயந்து அவளை உயிருடன் எரித்துவிடுகிறார் முறை மாப்பிள்ளை.

ஹீரோவும் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று நினைத்தால்.. ஒரு சோகப் பாட்டு பாடுகிறார். சரி.. இவர் உயிருடன் இருக்காப்புல போலிருக்கு என்று நினைத்தால் அப்படியே ஹீரோ வீட்டுக்கு வருகிறார்.. அங்கே ஒரு சாவு.. அம்மாவா? அப்பாவா? தங்கையா? என்றெல்லாம் நினைத்து நாம் எதிர்பார்ப்பில் இருக்க.. செத்துக் கிடப்பதே ஹீரோதான்.. தான் இறந்து கிடப்பதே தானே பார்க்கிறார் ஹீரோ. அந்தக் காட்சியில் இருந்து எந்தக் காட்சிவரையிலும் ஹீரோ ஆவி ரூபத்தில் நமக்கு கதை சொல்லியிருக்கிறார் என்பதை கண்டறிய இன்னொரு முறை படத்தைப் பார்த்தால்தான் தெரியும். ஹீரோயின் யசோதாவாக கெளரி நம்பியார். மலையாளப் பொண்ணு.

கார்த்திகா நாயருக்கு ஒண்ணுவிட்ட அக்காவாம்.. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அனுபவம் இருப்பதால் இவர் ஒருத்தர்தான் நடித்திருக்கிறார். காருக்குள் உட்கார்ந்து கொண்டு பயத்துடன் ‘போ போ’ என்று ஹீரோவை விரட்டுவதிலும், செங்கல் சூளைக்குள் காதலுடனுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியிலும் கொஞ்சூண்டு படத்தில் இயக்குதல் இருக்கின்றது என்பதைக் காட்டியிருக்கிறார். வில்லன் என்றவுடன் ஏதோ பயங்கரமான முகத்தைக் காட்ட வேண்டும் என்று இயக்குநர் நினைத்துவிட்டார் போலும். ‘வலியால் உயில் வலியாய்’ என்ற ஒரேயொரு பாடல் மட்டுமே கேட்க பிடித்தது.. சரவணப் பொய்கையாய் நடித்த வில்லன்தான் இசையமைப்பாளராம்.

ஹீரோவின் நண்பர்களை ஊருக்குள்ளேயே தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் போலும்.. சொதப்பலான வசனங்கள்.. சொதப்பலான இயக்கம்.. ஒரேயொரு காட்சி மட்டுமே படத்தில் சுவாரஸ்யமாக படமாக்கப்பட்டிருக்கிறது. அது வில்லன் சரவணப் பொய்கை கோஷ்டி பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொரு வில்லனின் மர அறுவை மில்லுக்கு போய் பஞ்சாயத்து பேசும் காட்சி.. சரவணப் பொய்கையின் கூட்டத்தில் லூஸு மாதிரியிருக்கும் ஒரு ஆளு நைஸாக போய் அந்த எதிர் வில்லனை போட்டுத் தள்ளும் காட்சி மட்டுமே மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி இயக்குநர் சஞ்சீவன், இயக்குதல் பற்றி இன்னும் கொஞ்சம் பாடம் படித்துவிட்டு வருவது நல்லது.

  15 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்