Home  |  திரை உலகம்

ஜெகஜால புஜபல தெனாலிராமனில் வடிவேலு பாடிய பாடல் !!

3 வருட இடைவெளிக்கு பிறகு வடிவேலு தற்போது நடித்து வரும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இந்தப் படத்தில் மன்னன் மற்றும் புத்திசாலி மந்திரி இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் வடிவேலு நடிக்கிறார். இதில் வடிவேலுக்கு ஜோடி மீனாக்ஷி தீக்ஷித். இவர் ஒரு மும்பை நடிகை. இவர், ஏற்கெனவே 'பில்லா 2' படத்தில் நடித்திருக்கிறார்.

 

இந்தப் படத்தை ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய யுவராஜ் தயாளன் இயக்குகிறார். யுவராஜ் 'போட்டா போட்டி' என்ற திரைப்படத்தை ஏற்கெனவே இயக்கியுள்ளார். 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' இவர் இயக்கும் இரண்டாவது படம். இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.

 

வடிவேலு தனது சொந்தக் குரலில் பாடும் கலக்கலான பாடல் ஒன்று சமீபத்தில் ஜெபுஜெ திரைப் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது. இந்தப் பாடல் எழுபதுகளில் வந்த சூப்பர் ஹிட் பழைய தமிழ்ப்பாடல் ஒன்றின் மெட்டில் அமைக்கப்பட்டுள்ளதாம். வடிவேலு ஒரு வாரப் பயிற்சிக்குப் பின் இந்தப் பாடலைப் .பாடியுள்ளாராம். நிச்சயம் இந்தப் பாடல் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் இடம்பெறும் என்கின்றனர் படக்குழுவினர். ஜெபுஜ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2014 ஏப்ரல் மாதத்தில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்