Home  |  திரை உலகம்

வடகறி ( Vadacurry )

வடகறி  ( Vadacurry )

Movie Name: Vadacurry வடகறி
Hero: JAI
Heroine: SWATHI
Year: 2014
Movie Director: Saravana Rajan
Movie Producer: Meeka Entertainment
Music By: Vivek - Mervin

 சென்னையின் நடுத்தரக் குடும்பத்துப் பையன் ஜெய். ஆட்டோக்கார அண்ணன் அருள்தாஸ், அண்ணி கஸ்தூரியுடன் வசிக்கும் அவருக்கு, மெடிக்கல் ரெப் வேலை கிடைக்கிறது.  ஒரு கொரியன் செட்தான் வாங்க முடிகிறது. அந்த போனோ, போகிற இடங்களிலெல்லாம் ரிங்டோன் என்ற பெயரில் லவுட்ஸ்பீக்கர் கணக்கில் சத்தம் போட்டுத் தொலைகிறது. அன்று பார்த்து ஒரு ஐபோனை அநாதையாகக் கண்டெடுக்கிறார். திருப்பிக் கொடுக்கலாம் என முயற்சிக்கும்போது, 'தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுடாத மச்சி,' என அட்வைஸ் தருகிறார் பாலாஜி. ஐபோன் இருந்தாதான் பெண்கள் விழுவார்கள் என்ற உபரித் தகவலைத் வேறு தர, திருப்பித் தரும் எண்ணத்தை தள்ளிப் போடுகிறார். பாலாஜி வீட்டு எதிர்வீட்டில் உள்ள தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் சுவாதியைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார் ஜெய். ஆனால், 'அவளுக்கு ஏற்கெனவே ஆள் இருக்கான், நீ அவ ப்ரெண்டை லவ் பண்ணு' என பாலாஜி கொடுத்த யோசனையை நம்பி, தோழியிடம் காதல் சொல்ல முயலும்போதுதான்,  உடைந்து போகும் தோழி, சுவாதியிடம் சண்டைக்குப் போக, வீம்புக்காகவே ஜெய்யை காதலிக்க ஆரம்பிக்கிறார் சுவாதி. தன்னிடம் உள்ள ஐபோனைப் பார்த்து மயங்கித்தான் சுவாதி காதலிப்பதாக நம்புகிறார் ஜெய். இதை சுவாதியிடம் சொல்ல, பெண்கள் என்ன அவ்வளவு கேவலமா என வெளுக்கிறார் அவர். சுவாதியின் மனநிலை, எம்ஜிஆர் ரசிகரான தன் அண்ணனின் நேர்மையை நினைத்துப் பார்க்கும் ஜெய், அந்த ஐபோனை உரியவரிடம் திருப்பித் தர முயற்சிக்கிறார். அந்த முயற்சியே அவரை பெரும் சிக்கலில் இழுத்துவிடுகிறது. அதிலிருந்து ஜெய் தப்பிப்பது மீதிக் கதை! அப்பாவி சென்னை இளைஞன் பாத்திரம் ஜெய்க்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆனால், இந்த வேடத்தை இன்னும் சிறப்பாக ஜெய்யால் செய்திருக்க முடியும். அவரோ, எல்லா காட்சியிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு காட்சி விதிவிலக்கு... வில்லன்களிடம் மிதிபட்டு முகத்தில் ரத்தக் கறையோடு வரும் அவரை, 'அதென்ன லிப்ஸ்டிக்' என சுவாதி கேட்க, அதற்கு ஜெய் காட்டும் ரியாக்ஷன் செம! சுவாதிக்கு பெரிய வேலையில்லை. 'தெத்துப் பல் தெரிய சிரிக்க வேண்டும்... அப்புறம் கழுத்திலிருந்து கால் வரை முழுவதும் மூடப்பட்ட காஸ்ட்யூமுடன் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும்.. அவ்ளோதான் உங்க போர்ஷன்,' என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது இயக்குநர். ஆனால் மெயின் வில்லன் என்று ஒருவரைக் காட்டும்போது இம்மியளவுக்குக் கூட த்ரில் இல்லை. அதான் தெரியுமே என்கிற மாதிரி ஆகிவிடுகிறது அந்தக் காட்சியில்! சன்னி லியோன் ஒரு பாடலுக்கு வந்து ஆடிவிட்டுப் போகிறார். அதற்கு மேல் அந்தப் பாடல் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. சுற்றிச் சுற்றி சென்னையையே காட்டினாலும் வெங்கடேஷ் ஒளிப்பதிவு அருமை. புதிய இசையமைப்பாளர்கள் விவேக் ஷிவா, மெர்வின் சாலமன் இசையில் ஒரு பாடல் பரவாயில்லை.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்