Home  |  திரை உலகம்

வானவில் வாழ்க்கை - இசையால் நிரம்புது !!!

வானவில் வாழ்க்கை - இசையால் நிரம்புது !!!

இந்தியாவின் முதல் மியூசிக்கல் ஃபிலிம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த படம்.

 

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

 

இந்த படத்தில் மொத்தம் 17 பாடல்கள் இருக்கிறதாம்.

 

 

இப்படத்தில் புதிய முயற்சியாக அறிமுகமாகும் கலைஞர்கள் அனைத்து பாடல்களையும் பாடி நடித்துள்ளனராம்.

 

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் விஜய் ஆதிராஜ் பொண்ணு வீட்டுக்காரன், ரோஜா கூட்டம், த்ரி ரோஸஸ் உள்பட சில படங்களிலும் நடித்தார். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார்., பல ஆண்டு முயற்சிக்குப்பிறகு ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த புத்தகம் படம மூலம் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனார் விஜய்ஆதிராஜ்.

 

 

இயக்குனர் வசந்த் டிரைலரை வெளியிட்டார். பசங்க புகழ் இயக்குனர் பாணடிராஜ் மற்றும் கோ அங்காடி தெரு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் இருவரும் பாடல்களை வெளியிட்டனர்.

 

 

எனது பல இயக்குனர் நண்பர்களை ஒரு மியூசிக்கல் ஃபிலிம் செய்ய சொல்லி கேட்டுகொண்டே இருப்பேன். இன்று அப்படி ஒரு நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. இந்த திறமைமிக்க இளைஞர் பட்டாளம் எனக்கு இந்த படத்தை உருவாக்குவதில் பெரிதும் உதவினர். இப்படத்தை தயாரித்த எனது தயாரிப்பாளர்கள் ஒசீனா ajr சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தாக்கு எனது நன்றிகள் கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

 

 

கதைப்படி இது ஒரு இசைப்படம் என்பதால், அதில் நடித்திருக்கும் 11 ஆண்-பெண் கேரக்டர்களுமே பாடகர்கள் சம்பந்தப்பட்டதுதான். அதனால் அந்த கேரக்டர்களில் நடித்த அத்தனை பேரையும் பாடகர்களாக தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன். அந்த வகையில், விஜய் ஆதிராஜின் மனைவி ரஸ்னாவும் நல்ல பாடகி என்பதால், அவரையும் ஒரு அழுத்தமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறாராம்.

 

வானவில் வாழ்க்கை ஒரு புதிய திருப்பம் - இது இசைக்கான திருப்பம்........

  27 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?