Home  |  திரை உலகம்

நவம்பரில் 'வாலு', டிசம்பரில் 'இது நம்ம ஆளு' : சிம்புவின் அதிரடி அறிவிப்பு !!

வரும் நவம்பரில் 'வாலு' திரைப்படமும், அதனைத்தொடர்ந்து டிசம்பரில் 'இது நம்ம ஆளு' திரைப்படமும் வெளியாகும் என நடிகர் சிம்பு அறிவித்துள்ளார்.


நடிகர் சிம்பு, விஜய் சந்தர் இயக்கத்தில் 'வாலு' என்ற படத்திலும், நெல்சன் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் 'இது நம்ம ஆளு' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இதில் எந்த ஒரு படமும் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்படாமல் இருந்தது. 2012 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட படம் 'வாலு'. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதே தயாரிப்பாளரின் தயாரிப்பில் தான் 'வேட்டை மன்னன்' படமும் தயாராகி வருகிறது. 


பாண்டிராஜ் இயக்கிவரும் 'இது நம்ம ஆளு' திரைப்படத்தை சிம்புவே தயாரித்து வருகிறார்.


இந்நிலையில் தனது படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து நடிகர் சிம்பு கூறியிருப்பதாவது,


"'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர். படத்திற்கான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வரும் நவம்பரில் 'வாலு' திரைப்படம் வெளியாகும். 


ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன்.


'இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. 'இது நம்ம ஆளு' கண்டிப்பாக டிசம்பரில் வெளியாகும். 


நவம்பர் மாதம் முதல் எனது படங்கள் தொடர்ச்சியாக வெளிவரும் என சிம்பு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். 

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்