Home  |  ஆரோக்கியம்

வாழை இலை - வாழ வைக்கும் இலை!!!

வாழை இலை - வாழ வைக்கும் இலை!!!

தை பொங்கல்,தலைவாழை என்றதும் நம் அனைவரின் ஞாபகத்துக்கு வருவது விருந்துதான்.


நமது பெருமை மிகு தமிழர்களுடைய கலாச்சாரத்தில் அதி முக்கிய பங்கு வாழை இலைக்கு உள்ளது.

 

 

அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இலையில்தான் நிச்சயம் இருக்கும். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது.

 

நலம் தரும் வாழை இலை சாப்பாடு .......

 

வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம். வலிமைக்குறைவு, இளைப்பு போன்றபாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

 

சூடான உணவுகளை வாழை இலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித மணம்தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு வாழை இலையினை தேர்ந்தெடுத்தனர்.

 

சின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழைஇலையில் தேன்தடவி தினமும் சிலமணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். சோரியாசிஸ், தோல் சுழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் வாழை இலைக்கு உண்டு.

 

வாழையின் மேற்பட்டை நாராக பூ கட்ட பயன்படுத்தலோடு ஆடைகள் நெய்யவும் பயன்படுகிறது.

 

தீக்காயம்ஏற்பட்டவர்களை வாழைஇலைமீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்போதுதான் சூட்டின் தாக்கம் குறையும். பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணைய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டியையும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையை யும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

 

வாழைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்குப் பயன் தரக் கூடியது. வாழைப் பூக்கள் ஒரு துணை உணவாக சரியான செரிமானம் இல்லாத போதும் குடற்கோளாறுகள் உள்ள போதும் இருந்து உடல் நலம் காக்கக் கூடியது. வாழையின் வேர்ப் பகுதி வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்ற வல்லது.

 


வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.

 


வாழைத் தண்டில் ஹெக் லோஸஸ் மற்றும் யுரோனிக் ஆசிட் ஆகிய இரண்டு பொருள்களையும் உள்ளடக்கிய பெக்டின் என்னும் மருத்துவப் பொருள் கொழுப்பை குறைக்க வல்லது. என்றும் விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

 

வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை(குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.

 

வாழை மரம் வாயில் தோரணத்துக்கு, வாழை இலை உண்பதற்கு மேற்பற்றாக உபயோகிப்பதற்கு, வாழைத் தண்டு மற்றும் கிழங்கு உணவாகவும், மருந்தாகவும், ரசவாதத்துக்காகவும் பயன்படுகிறது.

 


வாழை இலை வாழ்வளிக்கும் இலை....

 

  26 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
தினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா?
ஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் !!
மல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே !!
ஆண்களின் சக்தி பலம் பெற !!
கத்திரிக்கா பிஞ்சு கத்திரிக்கா !!
இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் !!
வெள்ளை அணு !!
பெண்களை தன் வசமாக்கிய மருதாணி !!
டீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் !!
குங்குமப் பூவின் நன்மைகள் !!