Home  |  அறுசுவை

அரிசி - பயன்கள்!!

அரிசி - பயன்கள்!!

தமிழ்நாட்டு உணவில் முக்கிய இடம்பிடிப்பது அரிசி.
அரிசி உணவில் மட்டும் அல்ல அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன.
அவற்றுக்கு தனித்தனியாக நன்மைகளும் உண்டு.

 

 

தமிழர்கள் புழுங்கல் மற்றும் பச்சரிசியை மட்டுமே உணவுக்கு பயன்படுத்துவோம்.
இப்போது பிரியாணிக்கு என பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு அரிசிக்கும் உள்ள குண நலன்கள் உள்ளன.

 

 


இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோஷங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

 


பாஸ்மதி அரிசி

இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசியில் பாஸ்மதி அரிசியும் ஒன்று. எவ்வாறு புழுங்கல் அரிசியில் பல்வேறு ரகங்களும், பல்வேறு விலைகளிலும் விற்கப்படுகிறதோ அதுபோலவே, பாஸ்மதி அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. பாஸ்மதி அரிசி வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் உள்ளன.

 

மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய பைபர் அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருப்பதால், மற்ற ஏனைய அரிசிகளை விட, பாஸ்மதி


பச்சரிசி

நெல்லை அவிக்காமல் அதில் இருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும். இது அவிக்கப்படாத அரிசி என்பதால், ஜீரணம் ஆக கடினமாகவும், அதிக நேரம் எடுக்கும் உணவாகவும் கருதப்படுகிறது. பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப் பிடிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். எனவே, உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.

பச்சரிசியின் நன்மைகள்

பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து கொழுப்புச் சத்தே இல்லாமல் பலவீனமாகக் காணப்படுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம். இதனால் உடலும் பருமனாகும். ஆனால், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்னை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

 

புழுங்கல் அரிசியில் உள்ள நன்மைகள்

புழுங்கல் அரிசி எளிதாக, விரைவாக ஜீரணம் ஆகக் கூடிய தன்மை கொண்ட ஒரு உணவாகும். அரிசி சாதம் முழுமையாக ஜீரணம் ஆக ஒரு மணி நேரம் கூட போதுமானது. பைபர் குறைவாக உள்ள உணவாகவும் புழுங்கல் அரிசி உள்ளது. எளிதாக ஜீரணம் ஆகக் கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டிய குழந்தைகள், வயதானவர்களுக்கு புழுங்கல் அரிசி சாதம் ஏற்ற உணவாக இருக்கும்.


சிகப்பரிசி

சிகப்பரிசி உடல் நலனுக்கு மிகவும் ஏற்ற உணவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் சிகப்பரிசியை பயன்படுத்தி உணவு தயாரிப்பது மிகவும் அரிது. புழுங்கல் அரிசியை விட இது விலை அதிகம் என்பதாலும், இதன் சுவை மற்ற சுவையோடு நன்றாக சேர்வதில்லை என்பதாலும், இதனை உணவில் பயன்படுத்துவது மிக மிகக் குறைவு. ஒரு சில மாநிலங்களில் மட்டும் சிகப்பரிசியை உணவுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

 


அனைவரின் உடல் வாகுக்கும் ஏற்றது அரிசி என்பதால் எல்லோரும் அதை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதனால் எந்த தீங்கும் ஏற்படாது . அது நோயை தராத ஒரு நல்ல உணவாகும்.


பூமியில் முளைக்கும் ஒவ்வொரு பொருளிலும் நோய், நிவாரணம் என்னும் இரண்டு குணங்கள் இருக்கிறது . அரிசியை தவிர்த்து . அதில் நிவாரணம் மட்டுமே உண்டு. நோய் இல்லை .


அரிசி உணவு இந்திரியத்தை நிறைய உற்பத்தி செய்வதோடு அதிக நேர தாம்பத்திய சுகத்தை தரும் . அரிசியில் தண்ணிருக்கு பகிராக பாலுற்றி சமைத்து சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து பாயசம் வைத்து மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால் முக வீக்கம் மற்றும் ஒற்றை தலைவலி குணமாகிவிடும் .

புழுங்கல் அரிசி

தற்போது நாம் சாப்பிடும் புழுங்கல் அரிசி பாலிஷ் செய்வதாகக் கூறி அதில் உள்ள ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் நீக்கப்பட்டுவிடுகிறது. அதையும் நாம் சில முறை தண்ணீரில் கழுவி, நன்கு வேக வைத்து கஞ்சியை வடித்துவிட்டு வெறும் சக்கையாக சாப்பிட்டு வருகிறோம். எனவே, பாலிஷ் செய்யப்படாத அரிசியே உடலுக்கு ஏற்ற உணவாக இருக்கும்.
அரிசி உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.

சிகப்பரிசியின் நன்மைகள்

சிகப்பரிசியில் அதிகமான பைபர் உள்ளது. இதனை சாப்பிடுவதால், ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படுகிறது. மேலும், சிகப்பரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து போதிய அளவுக்குக் கிடைக்கிறது. மேலும், சிகப்பரிசி சாதத்தை சாப்பிட்டால், உணவில் சர்க்கரையின் அளவு சேர்வது மிக தாமதமாக நடைபெறும். சிகப்பரிசியில் மேலும் ஏராளமான விட்டமின்களும், சத்துக்களும் உள்ளன. இது இயற்கையிலேயே உடலுக்கு ஏற்ற உணவாகும்.

ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் உண்டு. அவற்றில் மூன்று வகையான அரிசிகள் நிலைத்து நின்றன - சிவப்பு, கறுப்பு, வெள்ளை

 

  17 Mar 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!