Home  |  தொழில் நுட்பம்

உங்க போட்டவை அப்லோட் பண்ணினா போதும்... உங்க வயதை சொல்லும் இணையதளம் !!

உங்க போட்டவை அப்லோட் பண்ணினா போதும்... உங்க வயதை சொல்லும் இணையதளம் !!

உங்களுடைய போட்டோவை வைத்து, உங்களின் வயதை கணித்து சொல்லக்கூடிய ஒரு புதிய இணையதளம், நெட்டிசன் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.  

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இணையதளம் மனித முகங்களை கண்டுணரக்கூடிய ஃபேசியல் ரிகக்னேஷன் எனும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த தளத்தின் பின்னே உள்ள நுட்பம் மனித முகத்தை பார்த்து, புரிந்து கொண்டு அவர்களின் பாலினம் மற்றும் வயதை சரியாக கணித்து சொல்லக்கூடியது. சரியாக என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. கணித்துச்சொல்வது என்பதே சரியாக இருக்கும்.

இந்த தளத்தின் திறனை இணையவாசிகள் யார் வேண்டுமானாலும் பரிசோதித்துப் பார்க்கலாம். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து, எங்கே என் வயதை சொல்லுப்பார்க்கலாம் என கேட்பது தான்.

உடனே இந்த தளம் உங்கள் வயதை கணித்துச்சொல்லும். ஆனால், இந்த கணிப்பு எல்லா நேரங்களிலும் துல்லியமாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் சரியாக இருக்கும். சில நேரங்களில் தவறாக இருக்கும். தவறு எனில் அடுத்த படத்தை சமர்பிக்கவும் என இந்த தளமே சொல்லி விடுகிறது.

வயது விஷயத்தில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றால் இந்த தளத்தில் உங்கள் புகைப்படத்தை சமர்பிக்காமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் நீங்கள் இளமையானவராக இருந்து இந்த தளம் உங்கள் வயதை 50க்கு மேல் குறிப்பிட்டால் உங்கள் மனது லேசாக முறிந்துப்போகலாம். சொந்த புகைப்படத்தை சமர்பிக்க தயங்குபவர்களும் தாராளமாக இந்த தளத்தை சோதித்துப்பார்க்கலாம். அத்ற்கும் ஒரு வழி இருக்கிறது. அதாவது, இணையத்தில் உள்ள புகைப்படங்களை சமர்பித்து இந்த தளத்தை கணிக்கச்சொல்லலாம்.

இதற்காக மைக்ரோசாஃப்டின் பிங் தேடியரத்தின் புகைப்பட சேவையில் இருந்து படங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி தான் இந்த தளத்தை பிரபலமாக்கியுள்ளது. பலரும் இணையத்தில் கிடைக்கும் பிரபலங்களின் புகைப்படத்தை இந்த தளத்தில் சமர்பித்து அது தரும் கணிப்பை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகை, அரசியல் தலைவர்கள் என நன்கு அறியப்பட்ட நபர்களின் புகைபப்டங்களை சமர்பித்து, அவர்களின் வயது கணிப்பை, அது எந்த அளவுக்கு சரியாக இருக்கிறது என்பதை லேசான கிண்டலுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த தளம் யாருடையை வயதை எல்லாம் சரியாக சொல்கிறது, யாருடைய விஷ்யத்தில் கோட்டை விடுகிறது போன்ற விவரங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது.

இந்த சுவாரஸ்ய அம்சமே இந்த தளத்தை ஹிட்டாகி இருக்கிறது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் இந்த தளம் இந்த அளவு ஹிட்டாகும் என்பதை மைக்ரோசாஃப்டே எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நடத்திய டெவலப்பர் மாநாட்டில் தான் இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வித்தியாசமான இணையதளத்தின் முகவரி : http://how-old.net/

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!