Home  |  திரை உலகம்

உன் சமையலறையில் (Un Samayal Arayil )

உன் சமையலறையில் (Un Samayal Arayil )

Movie Name: Un Samayal Arayil உன் சமையலறையில்
Hero: PRAKASH RAJ
Heroine: SNEHA
Year: 2014
Movie Director: PRAKASH RAJ
Movie Producer: DUET MOVIES
Music By: ILAIYARAAJA


கல்லூரி காதல் தோல்விக்குப் பிறகு திருமணமே செய்யாமல் தனி மரமாகவே தன் நண்பர் குமரவேலுடன் வாழ்ந்து வரும் நாற்பத்தைந்து வயதான தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரகாஷ் ராஜ்(காளிதாசன்) ஒரு உணவுப் பிரியர். செவ்வாய் தோஷம், நாகதோஷம் என்று திருமணம் எதுவும் கைகூடாமல் முதிர் கன்னியாகவே வாழ்ந்து வரும் சினேகாவும் ஒரு உணவுப் பிரியை. சிநேகா ஒரு முறை கேரளா ரெஸ்டாரென்ட் என்று தவறுதலாக பிரகாஷ்ராஜுக்கு போன் செய்துவிட, அதைத் தொடர்ந்த சண்டையும், சமாதானமும், இருவரையும் நண்பர்களாக்கிவிட, போனில் மட்டுமே நட்பாக பேசிக் கொண்டிருப்பவர்கள் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

இதனால் நேரில் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கும் இருவரும், தங்கள் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையின் காரணமாக பிரகாஷ்ராஜ் தன் அக்கா மகனையும், சிநேகா தன் அறைத் தோழி சம்யுக்தாவையும் அனுப்பி வைக்கிறார்கள். இதன் பிறகு ஏற்படும் குழப்பங்களும், களேபரங்களும் பிரகாஷ்ராஜையும், சிநேகாவையும் இணைத்ததா என்பதே மீதிக் கதை.

பிரகாஷ்ராஜின் அனுபவ நடிப்பு படம் முழுவதும் தெரிகிறது. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். சினேகாவிடம் காதலுடன் போன் செய்யும் காட்சிகள் அருமை. ஊர்வசி, தம்பி ராமையா, குமரவேல் என காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் இல்லாதது கொஞ்சம் ஏமாற்றமே. தேஜஸ், சம்யுக்தா ஆகியோரின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லை. இந்த படத்தின் நிஜமான ஹீரோ இளையராஜாதா. இசைஞானி இளையராஜாவின் பாடல்கள், பின்னணி இசை மிக அற்புதம்.

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் அடுத்தப்படமும் இதே ஸ்டைல் தான்
கமலின் கருவிழி பிதுங்குகிறதா..?? நிகழ்ச்சி தொடங்கி அடுத்த நாளே வெளியானது, விஜய் டிவி “பிக் பாஸ்’ ஷோவ
இது எல்லாமே விஜய் ரசிகர்களால் தான்- மனம் நெகிழும் பிரபலம்
'தல 58' படத்தின் இயக்குனர் இவர்தான் உறுதியான தகவல்!
விஜய்-முருகதாஸ் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளரா?
சர்வைவா பாடலை கேட்ட அஜித் என்ன சொன்னார் தெரியுமா- யோகி.பி தகவல்
அஜித் ரசிகர்களே அடுத்த அதிரடிக்கு தயாரா- ஒரு ஸ்பெஷல் தகவல்
ஜுலை 1ம் தேதிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் விஜய் ரசிகர்கள்- அப்படி என்ன ஸ்பெஷல்
அஜித்தின் விவேகம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்பெஷல் விஷயம்
அடங்கப்பா..! – பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷன்களா?