Home  |  அறுசுவை

அம்பறெல்லா தோஸி

அம்பறெல்லா தோஸி

தேவையானவை :

அம்பறெல்லாக்காய் - 10
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த் - 4
தண்ணீர் - 1 -2 கப் 
 
செய்முறை :
 
1.அம்பறெல்லா காயின் தோலை கத்தியினால் சீவி அகற்றவும்.
2.தோலை சீவிய அம்பறெல்லாகாயை உரலில் போட்டு எல்லாப் பக்கமும் அடித்து தட்டையாக்கவும்.
3.அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டுவைக்கவும் .
4.அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில் தண்ணீருடன் சர்க்கரையை  போட்டு நன்றாக கரைக்கவும்.
5.கரைத்த பின்னர் இவற்றுடன்  ஏலக்காய்த் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக பாகு காய்ச்சவும்.
6.காய்ச்சிய பாகுடன் தட்டையான அம்பறெல்லா காயை போட்டு நன்றாக பிரட்டவும்.
7.பின்னர் சிறிது நேரம் அடுப்பில் வைத்து பாகு எல்லா அம்பிரலா காயில் சேரும் வரை திரும்பவும் நன்றாக பிரட்டவும்.
8.சிறிது நேரத்திற்கு பிறகு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி வைக்கவும்
9.இறக்கிய பின்னர் அம்பறெல்லா காயை இன்னொரு பாத்திரத்தில் போடவும்.
10.இந்த கலவையை வெய்யில் வைத்து நன்றாக காயவிடவும் இவையாவும் ஒரளவு காய்ந்ததும் ஈரமற்ற கரண்டியால் மறு பக்கம் திருப்பி போட்டு காய விடவும்
11.இவை யாவும் நன்றாக காய்ந்ததும் சுத்தமான சுவையான இனிப்பான அம்பறெல்லா தோஸி தயாராகிவிட்டது .
  28 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!