Home  |  தொழில் நுட்பம்

ட்யூப்லெஸ் டயர்களின் சாதகங்களும், பாதகங்களும் !!

ட்யூப்லெஸ் டயர்களின் சாதகங்களும், பாதகங்களும் !!

தற்போது, ட்யூப்லெஸ் டயர்கள் அதிகப்படியான கார்கள், மற்றும் பைக்குகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. ட்யூப்லெஸ் டயர்களின் சாதக, பாதக விஷயங்களைப் பற்றி இங்கு காண்போம்.

ட்யூப்லெஸ் டயர்களின் பயன்கள் :

எடை குறைவு :

ட்யூப் டயர்களைவிட, ட்யூப்லெஸ் டயர்கள் எடை குறைவானவை. இதனால், டயரினால் சஸ்பென்ஷனுக்கு ஏற்படும் பளு குறைக்கப்படுகிறது.

பஞ்சர் பிரச்னை குறைவு :

ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்துவதற்கு முன் ஊற்றப்படும் சீலண்ட், டயரில் சிறிய பஞ்சர்களை தானே சரிசெய்து காற்று வெளியேறுவதை தவிர்த்துவிடும். மேலும், டயூப்லெஸ் டயர் பஞ்சரானால்கூட ட்யூப் டயர் போன்று காற்று உடனே இறங்கிவிடாது. சீராக இறங்கும் என்பதால், அதனை உணர்ந்து கொண்டு அருகிலுள்ள பஞ்சர் கடையில் பஞ்சர் போட்டுவிடலாம்.

சேதம் கிடையாது

ட்யூப் டயர்களில் லிவர் பயன்படுத்தி கழற்றும்போது, ட்யூப் சேதமடையும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை ட்யூப்லெஸ் டயரில் கிடையாது.

உறுதி

ட்யூப்லெஸ் டயர்களின் உட்புறம் ஹாலோ பியூட்டைல், குளோரோ பியூட்டைல் உள்ளிட்ட பிரத்யேக வேதிப்பொருட்களின் பூச்சுடன் உறுதியாக வடிவக்கப்பட்டுள்ளன. இதனால், வெப்பமாகாது என்பதுடன் உட்புறத்திலிருந்து காற்று வெளியேற வாய்ப்பு மிக மிக குறைவு.

எரிபொருள் சிக்கனம்:

வாகனத்தின் எடைக்கு தக்கவாறு டயருக்குள் காற்று சமநிலையுடன் இருப்பதால் டயரின் சுழலும் வேகம் மற்றும் சுழலும் தன்மை சீராக இருக்கும். இதனால், அதிக பாதுகாப்பையும், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தையும் பெறலாம்.  

பாதுகாப்பு

விபத்துக்களுக்கு டயர் பஞ்சராவதும், ட்யூப் வெடிப்பதும் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. சாதாரண டயர்கள் எளிதில் பஞ்சராவதற்கும், ட்யூபில் உராய்வு அதிகமாகி வெடிப்பதற்கான ஆபத்துக்களும் அதிகம். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களின் வெளிப்புறம் அதிக தடிமனுடன் கூடிய உறுதியான ரப்பரை கொண்டிருப்பதால் காற்று திடீரென வெடித்து வெளியேறாது.

வெடிக்காது

வாகனங்களில் 100 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும்போது டயர், ட்யூப் இடையில் ஏற்படும் அதிக உராய்வு காரணமாக ட்யூபில் உள்ள காற்று சூடாகி வெடிக்கும் ஆபத்து உள்ளது. ஆனால், ட்யூப்லெஸ் டயர் அதிவேகத்தில் செல்லும்போதும் அதிக சூடாகாது என்பதால் டயர் வெடிக்கும் வாய்ப்பு குறைவு.

ரோடு கிரிப்

சில சமயங்களில் வாகனத்தின் எடை அதிகமாகும்போது ட்யூபில் காற்று சமநிலை இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் பேலன்ஸ் இல்லாமல்(வாப்லிங்) செல்லும். ஆனால், ட்யூப்லெஸ் டயர்களில் இந்த பிரச்னை இருக்காது. தரை பிடிப்பும் அதிகமாக இருக்கும். ட்யூப்லெஸ் டயரின் சில பாதகங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பாதகங்கள் :

பொருத்துவது கடினம்

ரிம்மில் ட்யூப்லெஸ் டயரை பொருத்தும்போது மிக கவனமாக பொருத்த வேண்டும். ரிம்மிற்கும், டயருக்கும் இடையில் காற்று வெளியேறாதவாறு மிக லாவகமாக பொருத்த வேண்டுயம்.

கவனம்

ரிம்முடன் சேர்த்து பொருத்தப்படுவதால், ரிம் பெட்டில் பாதிப்பு ஏற்பட்டால் ட்யூப்லெஸ் டயரில் காற்று இறங்கிவிடும். எனவே, கவனமாக ஓட்டுவது கூடுதல் பாதுகாப்பை தரும்.

மொத்தத்தில், ட்யூப் டயரைவிட ட்யூப்லெஸ் டயர் பல்வேறு வகைகளில் பயன் தருவதாக இருக்கிறது, எனவே, டயர் வாங்கும்போது சிறிது கூடுதல் விலையானாலும் ட்யூப்லெஸ் டயரையே வாங்குங்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

  22 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா?
வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….
அதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியா!GPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..
இன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது!!அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்!
ஒரு எஸ்எம்எஸ் மூலம் ஏர்டெல் 1.2 ஜிபி இலவச டேட்டா ...இதுதான் வழிமுறைகள்!..
‘WhatsApp Gold’ மெசேஜ் உங்களுக்கும் வந்ததா? உஷார்!இதில் இவ்ளோ பெரிய ஆபத்தா!!
உங்கள் Facebook பக்கத்தை யார் யார் எல்லாம் இப்போ பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா!!அந்த ஈசி வழி இதோ!!
தொலைந்து போன மொபைல் மற்றும் லேப்டாப்பை கண்டுபிடிக்க செய்ய வேண்டிய எளிய வழிகள்!
டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!
மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!