Home  |  அறுசுவை

தக்காளி ரசம்(Tomato Soup)

தேவையானவை :

பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு
புளிக்கரைசல் - இரண்டு கப்
தக்காளி - 2 பெரிது (மசித்தது)
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
ரசப் பொடி - 1  1/2 டீஸ்பூன்
எண்ணை, கடுகு, சீரகம் - தாளிக்க

செய்முறை:


    1.முதலில் ஒரு பாத்திரத்தில் கரைத்துவைத்துள்ள புளி, மசித்த தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு கொதிக்க விடவும்.தக்காளித் துணுக்குகள் வெந்து, புளி பச்சை வாசனை போனபின், ரசப் பொடி சேர்க்கவும்.மேலும் இரண்டு நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு, பருப்புத் தண்ணீர் சேர்க்கவும்.

    2.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மேலே நுரை சேர்ந்து ரசம் கொதிக்க மேலே பொங்கி வரும்போது அடுப்பை அணைத்து விட்டு அதன்மேல் சிறிது எண்ணை அல்லது நெய்யில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் தாளித்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

Tomato Soup

Ingredeints for Tomato Soup:

 

Boiled Dhal Water-2Cup

Curry Leaves-Little

Coriander Leaves-Little

Salt-as Needed

Tamarind Juice-2Cup

Tomato-2Big(Mashed)

Green Chilly-1

Turmeric Powder-1Pinch

Asafoetida-1/2tsp

Rasam Powder-11/2tsp

Oil, Mustard, Cumin-for Seasoning

 

Procedure to make Tomato Soup:

 

1. Take a vessel, mix tamarind juice, mashed tomato, salt, turmeric powder, green chilly, asafoetida, curry leaves and allow to boil well. when the raw smell subsides, add rasam powder. Allow to boil for 2 minutes and then add dhal water.

2. Cook at low flame. when foam forms, remove from flame.Heat oil or ghee in a pan, season the mustard and 1 tea spoon of cumin seed and put in to soup. Finally garnish with coriander leaves and serve it.

 

 

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!