Home  |  அறுசுவை

தக்காளி சாதம் (Tomato Rice)

தேவையானவை :

 

பச்சரிசி - 2 கப்

தக்காளி - 4

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணை - 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - 2 டீஸ்பூன் 

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4 பற்கள்

பட்டை - ஒரு சிறு துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

சோம்பு - 1/2 டீஸ்பூன்

பட்டை இலை - சிறிது

 

செய்முறை:

 

1.நன்றாக கழுவிய அரிசியை தண்ணீரில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற விடவும்.வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாகக் கீறி வைக்கவும்.முழு தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், பாத்திரத்தை மூடி வைக்கவும், அடுப்பை அணைத்து விடவும்.

2.சிறிது நேரம் சென்ற பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும். அரைத்த தக்காளிச் சாற்றுடன் தேவைகேற்ப தண்ணீரைச் சேர்த்து நான்கு கப் அளவிற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.குக்கரை அடுப்பிலேற்றி அதில் எண்ணையை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பட்டை இலை ஆகியவற்றைச் சேர்த்து சற்று வறுத்து கொள்ளவும்,

3.பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று பொன் நிறத்தில்  வதங்கியவுடன், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் ஊற வைத்துள்ள அரிசியை, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு சேர்க்கவும்.

4.அரிசியைத் தொட்டால் சுடும் அளவிற்கு வரும் வரை கவனமாகக் கிளறி விடவும். பின்னர் அதில் தக்காளிச் சாற்றையும், எலுமிச்சம் சாற்றையும் சேர்த்துக் கிளறி மூடி போட்டு 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு, குக்கர் ஆறியதும், திறந்து நன்கு கிளறி விடவும்.அதனுடன், கொத்துமல்லித்தழையைத் தூவி அலங்கரிக்கலாம்.

Tomato Rice

Ingredients for Tomato Rice:

 

Raw Rice-2 cup

Tomato-4

Green Chilly-2

Turmeric Powder-1/2 Tsp

Chilly Powder-1 Tsp

 

Oil-4 Tbsp

Salt-2 Tsp

Lemon Juice-2 Tsp

Large Onion-2

Ginger-1 Piece

Garlic-4 Flakes

Cinnamon-1 Small Piece

Cloves-4

Cardamom-2

Fennel-1/2 Tsp

Cinnamon Leaves-Little

 

Procedure to make Tomato Rice:

 

1. Allow the rice to soak for 15 or 20 minutes. Chop the onion, ginger and garlic. Peel the green chilies. Boil the tomatoes.

2. Grind the boiled tomatoes. Then take 4 cup of water and mix along with tomato paste. Heat oil in a cooker, add cinnamon, cloves, cardamom, fennel, cinnamon leaves and fry well.

3. Then add onion, green chilies, ginger and garlic. Then add turmeric powder, chilly powder, salt and stir well. Now add soaked rice.

4. Stir frequently and add tomato paste and lemon juice. Allow 2 or 3 whistles to boil well and remove from flame. Finally garnish with coriander leaves.

 

 

 

  14 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!