Home  |  அறுசுவை

தக்காளி- பூண்டு தொக்கு (Tomato Garlic Thokku)

தேவையானவை : 

 

தக்காளி - 1 கிலோ

பூண்டு - கால் கிலோ

புளி - எலுமிச்சம்பழ அளவு

உப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்.

 

தாளிக்க தேவையானவை : 

 

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எண்ணெய் - அரை கப்.

 

வறுத்துப் பொடிக்க தேவையானவை : 

 

வெந்தயம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

காம்பு கிள்ளிய காய்ந்த மிளகாய் - 25

 

செய்முறை: 

 

1.மிக்ஸ்சியில் தக்காளியை, உப்பு, புளி சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ளவும்.வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை, வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து ஒன்றாகப் பொடித்துக் கொள்ளுங்கள்.

 

2.மற்றொரு  வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டைச் சேருங்கள்.5 நிமிடங்கள் வதங்கியபின், அரைத்த தக்காளி விழுதைச் சேருங்கள்.தண்ணீர் வற்றி, சிறிது சேர்ந்தாற்போல வரும்போது, பொடித்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து, சுருளக் கிளறி இறக்குங்கள்.

Tomato Garlic Thokku

Ingredients for Tomato Garlic Thokku :


Tomato - 1 Kg,

Garlic - 1/4 Kg,

Tamarind - a lemon sized,

Salt - 1/2 Tbsp.


For Seasoning :


Mustard - 1 tsp,

Curry Leaves - Little,

Oil - 1/2 Cup.


Ingredients for Dry Fried : 


Fenugreeks - 1 Tsp,

Cumin - 1 Tsp,

Coriander - 1 Tsp,

Asafoetida - 1 tsp,

Dry Chilies piceces - 25(Chopped).


Method to make Tomato Garlic Thokku :


1. Grind the tomatoes, tamarind, salt in a mixi. Grind it well. Heat the pan and fry the ingredients which are given. And powder it well in a mixi.

2. Heat oil in a frying pan then add mustard, curry leaves and season it well. Then add garlic and allow it to fry. Then add tomato paste along with it. Then add powdered masala and turn it well. Boil it for few minutes. 


Tomato Garlic Thokku is ready to serve.

  12 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!