Home  |  அறுசுவை

தூதுவளை ரசம் (purple fruited pea eggplant soup)

தேவையானவை :

 

தூதுவளை இலை காம்புடன் - 1 கப்

புளி - எலுமிச்சையளவு

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 4 பல்

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க - கடுகு, சீரகம், மிளகாய் சிவப்பு

 

செய்முறை:

 

1.முதலில் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.பிறகு தூதுவளை இலையையும் தட்டிக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுரைத்து மேலே வரும் போது இறக்கவும். அதிக நேரம் ரசத்தை கொதிக்க விடக்கூடாது.

Purple Fruited Pea Eggplant Soup

Ingredients for Purple Fruited Pea Eggplant Soup:

 

Thoodhuvali leaves with stem-1Cup

Tamarind -Lemon Size

Dry Chilly-2

Garlic-4Flakes

Pepper-1/2tsp

Cumin Seed-1/2tsp

Salt-as Needed

For Seasoning-Mustard, Cumin, Red Chilly

 

Procedure to make Purple Fruited Pea Eggplant Soup:

 

1. Grind  pepper, cumin, chilly and garlic coarsely. Then beat the thoodhuvali leaves. Heat oil in a pan, add mustard, cumin, chilly and let to splutter. Then add the leaves and fry well. Then add the grinded ingredients and pour tamarind juice. Add salt and allow to boil well. When foam starts, remove from flame. Do not allow more time to boil rasam.

  10 Jul 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
பைனாபிள் கேசரி புது ரெசிப்பி !!
முருங்கை தேங்காய் பால் குழம்பு !!
கண்ணா லட்டு தின்ன ஆசையா !!
ஜொலி ஜொலிக்கும் ஜிலேபி !!
கொழு மொழு குலாப் ஜாமூன் !!
இப்போதும் எப்போதும் தேன் மிட்டாய் !!
வெள்ளை பூண்டு ஊறுகாய் !!
வேர்க்கடலைக் கூழ் - புத்துணர்ச்சி !!
ஊறுகாய் சுறு சுறு எலுமிச்சை !!
பள பளக்கும் பனங்கருப்பட்டி அல்வா !!