Home  |  திரை உலகம்

துள்ளி விளையாடு (Thulli Vilayadu )

துள்ளி விளையாடு (Thulli Vilayadu )

Movie Name: Thulli Vilayadu துள்ளி விளையாடு
Hero: Yuvaraj
Heroine: DEEPTHI NAMBIAR
Year: 2013
Movie Director: VINCENT SELVA
Movie Producer: RB Studios
Music By: SRIKANTH DEVA


அறிமுகநாயகர் யுவராஜுக்கு பெரிய தொழில் அதிபர் ஆகவேண்டும், அவரது நண்பர்களான சூரிக்கு பிரபல அரசியல்வாதி ஆகவேண்டும். சென்ட்ராயனுக்கு பெரும் நடிகர் ஆக வேண்டும் என்பது தான் லட்சியம், ஆசை, கனவு, குறிக்கோள் இப்படி. ஆனால் வெட்டி ஆபிஸர்களான மூவராலும் அவர்கள் நினைத்ததை எல்லாம் எப்படி அடையமுடியும். ஆனால் அதற்கும் குறுக்கு வழியில் ஒரு யோகம், ஒரு நல்ல நேரம் வருகிறது.

லோக்கல் அரசியல்பிரபலம் ஜெயப்பிரகாஷ், தேர்தலில் ஜெயிப்பதற்காக தன் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் 20 கோடியை தன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ‌ரெய்டு ‌வரஇருப்பது தெரிந்ததும், ஒரு வாடகை காரை எடுத்து அதில் மொத்த பணத்தையும் பதுக்கி, அதற்கு நம் அறிமுக நாயகர் யுவராஜை டிரைவராக்கி ஊர் ஊராக சுற்ற விடுகிறார். அதை மோப்பம் பிடிக்கும் காமெடி வில்லன் பிரகாஷ்ராஜ் கோஷ்டி, ஹீரோ யுவராஜை இரண்டு தட்டு தட்டி விட்டு யாருடைய பணம் எனத் தெரியாமலே ஜெபியின் பணத்தை கொள்ளை அடிக்கிறது.

அந்தப் பணத்தை ஜெயப்பிரகாஷுக்கே தேர்தல் நிதியாக கொடுக்க முனையும்போது அது ஜெபியின் பணம் எனத் தெரியவருவதுடன் ஜெபி காரில் கொடுத்துவிட்டது 20 கோடி தன் ஆட்கள் கொள்ளை அடித்தது வெறும் 2 கோடி என்பதும் மீது 18 கோடியை டிரைவர் யுவராஜ் அடித்து போய்விட்டதும் பிரகாஷ்ராஜுக்கு தெரிய வருகிறது! இதை ஜெபி எனும் ஜெயப்பிரகாஜ் நம்ப மறுக்கிறார். பிரகாஷ்ராஜ் அன்ட் கோவினர் யுவராஜை தேடிகின்றனர். யுவராஜ் தன் நண்பர்கள் சூரி,
சென்ட்ரயனுடன் ராஜஸ்தானுக்கு எஸ்கேப் ஆகிறார். அங்கு கதாநாயகி தீப்தியை சந்திக்கும் யுவராஜ். காதலில் விழுகிறார். யுவராஜ் அண்ட் கோவினரின் லவ்வும் லட்சியமும் நிறைவேறியதா?! பிரகாஷ்ராஜ் - ஜெ.பி.கோஷ்டியிடம் சிக்கி போனார்களா?! என்பது ‘துள்ளி விளையாடு’ படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை. ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, எஸ்.கே. பூபதியின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்