Home  |  ஆன்மிகம்

திருஅண்ணாமலையார் - நினைத்தாலே கிடைக்கும் சாந்தம்

திருஅண்ணாமலையார் - நினைத்தாலே கிடைக்கும் சாந்தம்

தலபுராணம் -அருணாசலபுராணம் அருணைக்கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

இங்குள்ள பாதாள லிங்கேஸ்வரர் சன்னதி-ரமணர் தவம் செய்த இடம் .

அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓர் அடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும்.

பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும். இரண்டடி எடுத்து வைத்தால் ராஜசூய யாகம் செய்த பலன். அத்துடன் சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் மகத்தான தானம் செய்த பலன் கிட்டும். நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.

வலமாக வைத்த ஓரடிக்கு முழுப் பலன்களும் சித்திக்கும். அருணாசலத்தை வலம் வருகிறேன் என்று சொன்னாலே பாவம் தீரும். வலம் வரவேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

அண்ணாமலையைத் தொழுது கிரிவலம் வந்தால் மது, மாது, சூது, கொலை, களவு என்ற பஞ்சமகா பாதகங்கள் தொலையும்” என்றெல்லாம் புராணங்கள் அருணாசல மலைவல மகிமை பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து பேசுகின்றன.


அண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலம் சிறப்பானது. காரணம் அன்றுதான், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான அன்னை, அண்ணலாகிய அருணாசலேஸ்வரரை வலம் வந்து இடப்பாகம் பெற்றாள்.


அதுமட்டுமல்ல - அன்று சந்திரன் தனது பூரண கலைகளுடன் முழுமையான பலத்துடன் காட்சி தருகிறான்.

சிவபெருமான் நந்தியாகவும், லிங்கமாகவும் மாறி மாறிக் காட்சி கொடுக்கும் திருவண்ணா மலையில் இன்றும் சித்தர்கள் சூட்சும வடிவில் கிரிவலம் வருவதாக நம்பிக்கை உள்ளது.

மலை வலம் வருவதால் தங்கள் பிரச்னைகளும், நோய்களும் நீங்கும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மலையைச் சுற்றும் பாதையின் நீளம் 14 கி.மீ. கிரிவலப் பாதையின் பல இடங்களிலிருந்து அண்ணாமலையைப் பார்க்கும் போது அது பல்வேறுபட்ட அழகிய வடிவங்களில் காட்சியளிக்கின்றது.


இத்திருக்கோவிலின் கிழக்குக்கோபுரம் 217 அடி உயரம், தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம்-திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம்- பேய்க்கோபுரம், வடக்கு கோபுரம்-அம்மணியம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.

வழி படுங்கள் நன்மை தருவார் நம் ஆதி சிவன்......

ஜகத்தை காக்கும் நம் ஜெகதீசனை அணுதினமும் நினைத்தாலே முக்தி கிட்டும்....

 

  26 Feb 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!