Home  |  ஆன்மிகம்

எழில்கொஞ்சும் திருமுர்த்திமலை:

திருப்பூர் மாவட்டம் ..உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 21 கிலோ மிட்டர் தொலைவில் இயற்கை எழில்கொஞ்சும் திருமுர்த்திமலைஉள்ளது ..

 

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில் பழமையும் ,பெருமையும் கொண்ட திருத்தலமாக அனைவராலும் போற்றப் படுகிறது ..

 

> இறைவனை இயற்கையின் வடிவமாக வழிபட்டது நமது மானுட இனம் .அந்த வகையில் இங்கு குன்றமே கோவிலாக பிரம்மன் ,விஷ்ணு ,ருத்திரன் ஆகிய மும்முர்த்திகளும் `ஒன்று சேர ஒரே கல்லுருவில் தட்சணாமூர்த்தி அம்சத்தில் காட்சி தருவது தனி சிறப்பாகும். மூன்று உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன .அவை வடிக்கப்பட்ட காலம் அறிய முடியவில்லை 

 

> மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் ஆனைமலைத் தொடர்ச்சி அருகே குருமலையிலிருந்து சிற்றோடையாக உருவாகிறது தோணி நதி... இந்நதி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.சித்தர்கள் கண்ட உடற்பிணியகற்றும் மூலிகை திர்த்தமாக விளங்குகிறது ..'' திருமூர்த்தி மலை புராணம்'' எனும் தமிழ்பாக்களால் வடிக்கப்பட்ட சிற்றிலக்கியமும் ஒன்றுண்டு ...காஞ்சி மரங்கள் நிறைந்த இடமாக ஒரு காலத்தில் இம்மலை இருந்ததால் காஞ்சி மலை என அழைக்கப்பட்டு அது மருவி ''கஞ்சி மலை'' எனவும் அழைக்கப்படுகிறது..

 

> அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள் .குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனாக அமணலிங்கேஸ்வரனாக இருப்பதால் ஆணவம் ,கன்மம் ,மாயை எனும் மும்மலங்களயும் விட்டொழித்து ஞான யோக சாதனைகளை பெற விரும்புவோர் இவரை வழிபடுதல் சிறப்பான ஒன்றாகும் ..

 

> திரிசங்கு ,அரிசந்திரன் ,நாரதன் ,தருமன் போன்றவர் வழிபட்டு பேறுபெற்றதாக புராண செய்தியில் சூதகா முனிவர் கூறுகிறார் ..எட்டு கல் மண்டபம் ,விநாயகப் பெருமாள் ,முருகப் பெருமாள் என தனி சந்நிதியில் காட்சி தருகிறார்கள் .. 

 

> நீத்தார்க்கு காரியம் செய்ய புனிதமான இடமாக கருதப்படுகிறது கொவிலில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி அணை உள்ளது போட்டிங் போகலாம் ,சிறுவர் பூங்கா ,வண்ணமீன் காட்சியகம் ,நீளமான தரைவழி காண்டூர் கால்வாய் கண்கொள்ளா காட்சியாகும் ...ஒருமுறை வந்தால் மறுமுறை வரத்தூண்டும்.... வந்துதான் பாருங்களேன் ...!!!

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!