Home  |  ஆன்மிகம்

திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!

திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!

கொங்கு நாட்டு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரம் பாடல் பெற்றதும், திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலுமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவிலருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், 81 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, ஆறு கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன.

 


28.15.2015 அதிகாலை, 5:00 மணிக்கு நிறைவு கால யாக பூஜை துவங்கி, 7:30 மணிக்கு நிறைவடைந்தது. காலை, 9:05 மணிக்கு திருமுருகநாத சுவாமி, ஸ்ரீசண்முகநாதர், வல்லியம்மை ஆகிய விமான கோபுரங்களுக்கு புனித நீரால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் செய்து சிறப்பித்தனர்.

 


மேலும் ஓம் நமச்சிவாய சண்முகநாதருக்கு அரோகரா என திரளாக திரண்டிருந்த பக்தர்கள் கோஷம் எழுப்பி, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டது. மகாபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மங்கல தீபாராதனை நடைபெற்றது.

 

சுவாமி தரிசனம் பெற பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். யாகசாலை அருகேயும், நலத்தோட்டத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Thirumurugan poondi function
  14 Nov 2016
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
யார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....!
ஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் !!
ஓம் நமசிவாய - சிவ துதி !!
அருணகிரிநாதரின் சிவ பாடல் !!
லிங்கம் சிவ லிங்கம் !!
திருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் !!
சிவ சரணம் துதி பாடல் !!
தென்கயிலாயம் வெள்ளியங்கிரியான்டவர் !!
திருநள்ளார் தெர்பாராண்யேஸ்வரர் கோயில் !!
திருவண்ணாமலை முக்தி தலம் !!