அதிகாரம்: பொச்சாவாமை
Unforgetfulness - Pochchaavaamai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:531 இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul Bring self-forgetfulness than if transcendent wrath control.
குறள்:532 பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

Perpetual, poverty is death to wisdom of the wise; When man forgets himself his glory dies!.
குறள்:533 பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

'To self-oblivious men no praise'; this rule Decisive wisdom sums of every school.
குறள்:534 அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

'To cowards is no fort's defence'; e'en so The self-oblivious men no blessing know.
குறள்:535 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

To him who nought foresees, recks not of anything, The after woe shall sure repentance bring.
குறள்:536 இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.

Towards all unswerving, ever watchfulness of soul retain, Where this is found there is no greater gain.
குறள்:537 அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

Though things are arduous deemed, there's nought may not be won, When work with mind's unslumbering energy and thought is done.
குறள்:538 புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

Let things that merit praise thy watchful soul employ; Who these despise attain through sevenfold births no joy.
குறள்:539 இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Think on the men whom scornful mind hath brought to nought, When exultation overwhelms thy wildered thought.
குறள்:540 உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

'Tis easy what thou hast in mind to gain, If what thou hast in mind thy mind retain.