அதிகாரம்: பெருமை
Greatness - Perumai
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.


குறள் விளக்கம்
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)

TRANSLITERATION:
Atram Maraikkum Perumai Sirumaidhaan Kutrame Koori Vitum

TRANSLATION:
Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim.

MEANING IN ENGLISH:
The great hide the faults of others; the base only divulge them.
பெருமை - MORE KURAL..
குறள்:971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.

The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'
குறள்:972 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worth.
குறள்:973 மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estate.
குறள்:974 ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

Like single-hearted women, greatness too, Exists while to itself is true.
குறள்:976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்
கொள் வேம் என்னும் நோக்கு.

'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soul.
குறள்:977 இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.

Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bred.
குறள்:978 பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with prais
குறள்:979 பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme.
குறள்:980 அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaim.