அதிகாரம்: மானம்
Honour - Maanam
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:961

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.


குறள் விளக்கம்
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக. (அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)

TRANSLITERATION:
Indri Amaiyaach Chirappina Aayinum Kundra Varupa Vital

TRANSLATION:
Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain.

MEANING IN ENGLISH:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
மானம் - MORE KURAL..
குறள்:961 இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

Though linked to splendours man no otherwise may gain, Reject each act that may thine honour's clearness stain.
குறள்:962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name.
குறள்:963 பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power.
குறள்:964 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth.
குறள்:965 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

If meanness, slight as 'abrus' grain, by men be wrought, Though like a hill their high estate, they sink to nought.
குறள்:966 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

It yields no praise, nor to the land of Gods throws wide the gate: Why follow men who scorn, and at their bidding wait?.
குறள்:967 ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

Better 'twere said, 'He's perished!' than to gain The means to live, following in foeman's train.
குறள்:968 மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

When high estate has lost its pride of honour meet, Is life, that nurses this poor flesh, as nectar sweet?.
குறள்:969 மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.
குறள்:970 இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

Who, when dishonour comes, refuse to live, their honoured memory Will live in worship and applause of all the world for aye!.