அதிகாரம்: குடிமை
Nobility - Kutimai
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:956

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.


குறள் விளக்கம்
மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனைக் கொண்டு தகுதியில்லாதவற்றைக் செய்யமாட்டார்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் - வசையற்று வருகின்ற நம் குடிமரபினோடு ஒத்து வாழக் கடவேம் என்ற கருதி அவ்வாறு வாழ்வோர்; சலம் பற்றிச் சால்பு இல செய்யார் - வறுமையுற்றவழியும், வஞ்சனையைப் பொருந்தி, அமைவிலவாய தொழில்களைச் செய்யார். (அமைவின்மை அம் மரபிற்கு ஏலாமை. இவை மூன்று பாட்டானும் அவர் வறுமையுற்ற வழியும் அவ்வியல்பின் வேறுபடார் என்பது கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Salampatrich Chaalpila Seyyaarmaa Satra Kulampatri Vaazhdhum En Paar

TRANSLATION:
Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame.

MEANING IN ENGLISH:
Those who seek to preserve the irreproachable honour of their families will not viciously do what is detrimental thereto.
குடிமை - MORE KURAL..
குறள்:952 ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

In these three things the men of noble birth fail not: In virtuous deed and truthful word, and chastened thought.
குறள்:953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.

The smile, the gift, the pleasant word, unfailing courtesy These are the signs, they say, of true nobility.
குறள்:954 அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.

Millions on millions piled would never win The men of noble race to soul-degrading sin.
குறள்:955 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

Though stores for charity should fail within, the ancient race Will never lose its old ancestral grace.
குறள்:956 சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.

Whose minds are set to live as fits their sire's unspotted fame, Stooping to low deceit, commit no deeds that gender shame.
குறள்:957 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

The faults of men of noble race are seen by every eye, As spots on her bright orb that walks sublime the evening sky.
குறள்:958 நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim
குறள்:959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth.
குறள்:960 நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

Who seek for good the grace of virtuous shame must know; Who seek for noble name to all must reverence show.