அதிகாரம்: மருந்து
Medicine - Marundhu
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:949

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.


குறள் விளக்கம்
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Utraan Alavum Piniyalavum Kaalamum Katraan Karudhich Cheyal

TRANSLATION:
The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.

MEANING IN ENGLISH:
The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).
மருந்து - MORE KURAL..
குறள்:941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease.
குறள்:942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again.
குறள்:943 அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.

Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again.
குறள்:944 அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.
குறள்:945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel.
குறள்:946 இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.

On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure.
குறள்:947 தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.

Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
குறள்:948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.

Disease, its cause, what may abate the ill: Let leech examine these, then use his skill.
குறள்:949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.
குறள்:950 உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide.