அதிகாரம்: சூது
Gambling - Soodhu
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:935

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.


குறள் விளக்கம்
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Kavarum Kazhakamum Kaiyum Tharukki Ivariyaar Illaaki Yaar

TRANSLATION:
The dice, and gaming-hall, and gamester's art, they eager sought, Thirsting for gain- the men in other days who came to nought.

MEANING IN ENGLISH:
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).
சூது - MORE KURAL..
குறள்:931 வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

Seek not the gamester's play; though you should win, Your gain is as the baited hook the fish takes in.
குறள்:932 ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way That they may good obtain, and see a prosperous day?.
குறள்:933 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away.
குறள்:934 சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

Gaming brings many woes, and ruins fair renown; Nothing to want brings men so surely down.
குறள்:935 கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

The dice, and gaming-hall, and gamester's art, they eager sought, Thirsting for gain- the men in other days who came to nought.
குறள்:936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil, They suffer grievous want, and sorrows sore bewail.
குறள்:937 பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

Ancestral wealth and noble fame to ruin haste, If men in gambler's halls their precious moments waste.
குறள்:938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.

Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away All grace, and leaves the man to utter misery a prey.
குறள்:939 உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.

Clothes, wealth, food, praise, and learning, all depart From him on gambler's gain who sets his heart.
குறள்:940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.

Howe'er he lose, the gambler's heart is ever in the play; E'en so the soul, despite its griefs, would live on earth alway.