அதிகாரம்: கள்ளுண்ணாமை
Not Drinking Palm-Wine - Kallunnaamai
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:928

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.


குறள் விளக்கம்
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu Oliththadhooum Aange Mikum

TRANSLATION:
No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.

MEANING IN ENGLISH:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.
கள்ளுண்ணாமை - MORE KURAL..
குறள்:921 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away.
குறள்:922 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

Drink not inebriating draught. Let him count well the cost. Who drinks, by drinking, all good men's esteem is lost.
குறள்:924 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

Shame, goodly maid, will turn her back for aye on them Who sin the drunkard's grievous sin, that all condemn
குறள்:925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

With gift of goods who self-oblivion buys, Is ignorant of all that man should prize.
குறள்:926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Sleepers are as the dead, no otherwise they seem; Who drink intoxicating draughts, they poison quaff, we deem.
குறள்:927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்

Who turn aside to drink, and droop their heavy eye, Shall be their townsmen's jest, when they the fault espy.
குறள்:928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

No more in secret drink, and then deny thy hidden fraud; What in thy mind lies hid shall soon be known abroad.
குறள்:929 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. Is he who strives to sober drunken man with reasonings grave.
குறள்:930 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

When one, in sober interval, a drunken man espies, Does he not think, 'Such is my folly in my revelries'?.