அதிகாரம்: வரைவின்மகளிர்
Wanton Women - Varaivinmakalir
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:913

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று


குறள் விளக்கம்
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற்போலும். (பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர், அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Porutpentir Poimmai Muyakkam Iruttaraiyil Edhil Pinandhazheei Atru

TRANSLATION:
As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms!.

MEANING IN ENGLISH:
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.
வரைவின்மகளிர் - MORE KURAL..
குறள்:911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.

Those that choice armlets wear who seek not thee with love, But seek thy wealth, their pleasant words will ruin prove.
குறள்:912 பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.

Who weigh the gain, and utter virtuous words with vicious heart, Weighing such women's worth, from their society depart.
குறள்:913 பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

As one in darkened room, some stranger corpse inarms, Is he who seeks delight in mercenary women's charms!.
குறள்:914 பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

Their worthless charms, whose only weal is wealth of gain, From touch of these the wise, who seek the wealth of grace, abstain.
குறள்:915 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

From contact with their worthless charms, whose charms to all are free, The men with sense of good and lofty wisdom blest will flee.
குறள்:916 தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn away.
குறள்:917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

Who cherish alien thoughts while folding in their feigned embrace, These none approach save those devoid of virtue's grace.
குறள்:918 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

As demoness who lures to ruin woman's treacherous love To men devoid of wisdom's searching power will prove.
குறள்:919 வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

The wanton's tender arm, with gleaming jewels decked, Is hell, where sink degraded souls of men abject.
குறள்:920 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er, Are those on whom the light of Fortune shines no more.