அதிகாரம்: பெரியாரைப் பிழையாமை
Not Offending the Greatc - Periyaaraip Pizhaiyaamai
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:891

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.


குறள் விளக்கம்
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Aatruvaar Aatral Ikazhaamai Potruvaar Potralul Ellaam Thalai

TRANSLATION:
The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will.

MEANING IN ENGLISH:
Not to disregard the power of those who can carry out (their wishes) is more important than all the watchfulness of those who guard (themselves against evil).
பெரியாரைப் பிழையாமை - MORE KURAL..
குறள்:891 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.

The chiefest care of those who guard themselves from ill, Is not to slight the powers of those who work their mighty will.
குறள்:892 பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.

If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill.
குறள்:893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.

Who ruin covet let them shut their ears, and do despite To those who, where they list to ruin have the might.
குறள்:894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.

When powerless man 'gainst men of power will evil deeds essay, Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
குறள்:895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.

Who dare the fiery wrath of monarchs dread, Where'er they flee, are numbered with the dead.
குறள்:896 எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

Though in the conflagration caught, he may escape from thence: He 'scapes not who in life to great ones gives offence.
குறள்:897 வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.

Though every royal gift, and stores of wealth your life should crown, What are they, if the worthy men of mighty virtue frown?.
குறள்:898 குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

If they, whose virtues like a mountain rise, are light esteemed; They die from earth who, with their households, ever-during seemed.
குறள்:899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

When blazes forth the wrath of men of lofty fame, Kings even fall from high estate and perish in the flame.
குறள்:900 இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

Though all-surpassing wealth of aid the boast, If men in glorious virtue great are wrath, they're lost.