அதிகாரம்: உட்பகை
Enmity within - Utpakai
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:886

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.


குறள் விளக்கம்
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது. (பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Ondraamai Ondriyaar Katpatin Egngnaandrum Pondraamai Ondral Aridhu

TRANSLATION:
If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door.

MEANING IN ENGLISH:
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
உட்பகை - MORE KURAL..
குறள்:882 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fear!.
குறள்:883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knife.
குறள்:884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.

If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurt.
குறள்:885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wise.
குறள்:886 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the door.
குறள்:887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.

As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath sway.
குறள்:888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.

As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath sway.
குறள்:889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.

Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmity.
குறள்:890 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company.