அதிகாரம்: நட்பாராய்தல்
Investigation in forming Friendships - Natpaaraaidhal
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:792

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.


குறள் விளக்கம்
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram Tharum

TRANSLATION:
Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain.

MEANING IN ENGLISH:
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
நட்பாராய்தல் - MORE KURAL..
குறள்:791 நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

To make an untried man your friend is ruin sure; For friendship formed unbroken must endure.
குறள்:792 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain.
குறள்:793 குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.

Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to thee.
குறள்:794 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim.
குறள்:795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

Make them your chosen friend whose words repentance move, With power prescription's path to show, while evil they reprove.
குறள்:796 கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.

Ruin itself one blessing lends: 'Tis staff that measures out one's friends.
குறள்:797 ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.

'Tis gain to any man, the sages say, Friendship of fools to put away.
குறள்:798 உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.
குறள்:799 கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.

Of friends deserting us on ruin's brink, 'Tis torture e'en in life's last hour to think.
குறள்:800 மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

Cling to the friendship of the spotless one's; whate'er you pay. Renounce alliance with the men of evil way.