அதிகாரம்: நட்பு
Friendship - Natpu
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:790

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.


குறள் விளக்கம்
இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் - இவர் நமக்கு இத்துணை யன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரையொருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த் தோன்றும். ('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும் வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார். இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Inaiyar Ivaremakku Innamyaam Endru Punaiyinum Pullennum Natpu

TRANSLATION:
Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'.

MEANING IN ENGLISH:
Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.
நட்பு - MORE KURAL..
குறள்:781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

What so hard for men to gain as friendship true? What so sure defence 'gainst all that foe can do?.
குறள்:782 நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
குறள்:783 நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good.
குறள்:784 நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.

Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you stray.
குறள்:786 முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.

Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is near.
குறள்:787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weeps.
குறள்:788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay.
குறள்:789 நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find.
குறள்:790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'.