அதிகாரம்: அரண்
The Fortification - Aran
குறள் இயல்: அரணியல்
The Essentials of a State - Araniyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:745

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.


குறள் விளக்கம்
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது. (கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

TRANSLITERATION:
Kolarkaridhaaik Kontakoozhth Thaaki Akaththaar Nilaikkelidhaam Neeradhu Aran

TRANSLATION:
Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good.

MEANING IN ENGLISH:
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
அரண் - MORE KURAL..
குறள்:741 ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

fort is wealth to those who act against their foes; Is wealth to them who, fearing, guard themselves from woes.
குறள்:742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.

A fort is that which owns fount of waters crystal clear, An open space, a hill, and shade of beauteous forest near.
குறள்:743 உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.

Height, breadth, strength, difficult access: Science declares a fort must these possess.
குறள்:744 சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.

A fort must need but slight defence, yet ample be, Defying all the foeman's energy.
குறள்:745 கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.

Impregnable, containing ample stores of food, A fort for those within, must be a warlike station good.
குறள்:746 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.

A fort, with all munitions amply stored, In time of need should good reserves afford.
குறள்:747 முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.

A fort should be impregnable to foes who gird it round, Or aim there darts from far, or mine beneath the ground.
குறள்:748 முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

Howe'er the circling foe may strive access to win, A fort should give the victory to those who guard within.
குறள்:749 முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

At outset of the strife a fort should foes dismay; And greatness gain by deeds in every glorious day.
குறள்:750 எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

Howe'er majestic castled walls may rise, To craven souls no fortress strength supplies.