அதிகாரம்: நாடு
The Land - Naatu
குறள் இயல்: அரணியல்
The Essentials of a State - Araniyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:740

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.


குறள் விளக்கம்
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைதிருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமல் போகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல் இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம் இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும் நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.(வேந்து அமைவு எனவே, குடிகள் அவன்மாட்டு அன்புடையராதலும்,அவன்தான் இவர்மாட்டு அருளுடையனாதலும் அடங்கின. அவைஇல்வழி வாழ்வோர் இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவைஇரண்டு பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Aangamai Veydhiyak Kannum Payamindre Vendhamai Villaadha Naatu

TRANSLATION:
Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.

MEANING IN ENGLISH:
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.
நாடு - MORE KURAL..
குறள்:731 தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land' .
குறள்:732 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rare.
குறள்:733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.

When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land'
குறள்:734 உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
குறள்:736 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increase.
குறள்:737 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defence.
குறள்:738 பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.

A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealth.
குறள்:739 நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are bought
குறள்:740 ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peace.