அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுதல்
Conduct in the Presence of the King - Conduct in the Presence of the King
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:696

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.


குறள் விளக்கம்
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதிர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால் அப்பொழுது நிகழ்கி்ன்ற அவன் குறிப்பினை அறிந்து; காலம் கருதி- சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும் நோக்கி; வெறுப்பு இலவேண்டுப வேட்பச் சொலல் - வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை அவன் விரும்பும் வகை சொல்லுக. (குறிப்புக் காரியத்தின்கண் அன்றிக் காம வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக் காலத்தும் சொல்லுதல் பயனின்றாகலின் 'குறிப்பு அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும், பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல் வேணடாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்' என்றும் கூறினார்.)

TRANSLITERATION:
Kuripparindhu Kaalang Karudhi Veruppila Ventupa Vetpach Cholal

TRANSLATION:
Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare.

MEANING IN ENGLISH:
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
மன்னரைச் சேர்ந்தொழுதல் - MORE KURAL..
குறள்:692 மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

To those who prize not state that kings are wont to prize, The king himself abundant wealth supplies.
குறள்:693 போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

Who would walk warily, let him of greater faults beware; To clear suspicions once aroused is an achievement rare.
குறள்:694 செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

All whispered words and interchange of smiles repress, In presence of the men who kingly power possess.
குறள்:695 எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

Seek not, ask not, the secret of the king to hear; But if he lets the matter forth, give ear!.
குறள்:696 குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

Knowing the signs, waiting for fitting time, with courteous care, Things not displeasing, needful things, declare.
குறள்:697 வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

Speak pleasant things, but never utter idle word; Not though by monarch's ears with pleasure heard.
குறள்:698 இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

Say not, 'He's young, my kinsman,' despising thus your king; But reverence the glory kingly state doth bring.
குறள்:699 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

'We've gained his grace, boots nought what graceless acts we do', So deem not sages who the changeless vision view.
குறள்:700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

Who think 'We're ancient friends' and do unseemly things; To these familiarity sure ruin brings.