அதிகாரம்: வினைத்தூய்மை
Purity in Action - Vinaiththooimai
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.


குறள் விளக்கம்
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)

TRANSLITERATION:
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam Mutindhaalum Peezhai Tharum

TRANSLATION:
To those who hate reproof and do forbidden thing. What prospers now, in after days shall anguish bring.

MEANING IN ENGLISH:
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
வினைத்தூய்மை - MORE KURAL..
குறள்:651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.

The good external help confers is worldly gain; By action good men every needed gift obtain.
குறள்:652 என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

From action evermore thyself restrain Of glory and of good that yields no gain.
குறள்:654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view.
குறள்:655 எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

Do nought that soul repenting must deplore, If thou hast sinned, 'tis well if thou dost sin no more.
குறள்:656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

Though her that bore thee hung'ring thou behold, no deed Do thou, that men of perfect soul have crime decreed.
குறள்:657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

Than store of wealth guilt-laden souls obtain, The sorest poverty of perfect soul is richer gain.
குறள்:658 கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

To those who hate reproof and do forbidden thing. What prospers now, in after days shall anguish bring.
குறள்:659 அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

What's gained through tears with tears shall go; From loss good deeds entail harvests of blessings grow.
குறள்:660 சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

In pot of clay unburnt he water pours and would retain, Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
குறள்:661 வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

What men call 'power in action' know for 'power of mind' Externe to man all other aids you find.