அதிகாரம்: அமைச்சு
The Office of Minister of state - Amaichchu
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:631

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.


குறள் விளக்கம்
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் - அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் - அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். (கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.)

TRANSLITERATION:
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum Aruvinaiyum Maantadhu Amaichchu

TRANSLATION:
A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge.

MEANING IN ENGLISH:
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
அமைச்சு - MORE KURAL..
குறள்:631 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge.
குறள்:632 வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combined.
குறள்:633 பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.
குறள்:634 தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.

A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive word.
குறள்:635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

The man who virtue knows, has use of wise and pleasant words. With plans for every season apt, in counsel aid affords.
குறள்:636 மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.

When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands before.
குறள்:637 செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in act.
குறள்:638 அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.

'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words away.
குறள்:639 பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.

A minister who by king's side plots evil things Worse woes than countless foemen brings.
குறள்:640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.

For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.