அதிகாரம்: மடியின்மை
Unsluggishness - Matiyinmai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:602

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.


குறள் விளக்கம்
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக. ('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது. நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை நெருப்பாகவே கருதுக என்றாற்போல், மடியின் தீயது பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார். 'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம் உயர்வர்; உயரவே குடி உயரும் என்பார், குடியைக் குடியாக வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும் என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக் கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.)

TRANSLITERATION:
Matiyai Matiyaa Ozhukal Kutiyaik Kutiyaaka Ventu Pavar

TRANSLATION:
Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity.

MEANING IN ENGLISH:
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
மடியின்மை - MORE KURAL..
குறள்:601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its light.
குறள்:602 மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignity.
குறள்:603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himself.
குறள்:604 குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive.
குறள்:605 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shore.
குறள்:606 படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

Though lords of earth unearned possessions gain, The slothful ones no yield of good obtain.
குறள்:607 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contempt.
குறள்:608 மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they be.
குறள்:609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

Who changes slothful habits saves Himself from all that household rule depraves.
குறள்:610 மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestrid.