அதிகாரம்: ஊக்கமுடைமை
Energy - Ookkamutaimai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.


குறள் விளக்கம்
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் - அரசராயினார் கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து - அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மையுடைத்து. (உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில் தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.)

TRANSLITERATION:
Ulluva Thellaam Uyarvullal Matradhu Thallinun Thallaamai Neerththu

TRANSLATION:
Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will.

MEANING IN ENGLISH:
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
ஊக்கமுடைமை - MORE KURAL..
குறள்:592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs.
குறள்:593 ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.

'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessed.
குறள்:594 ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.

The man of energy of soul inflexible, Good fortune seeks him out and comes a friend to dwell.
குறள்:595 வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.

With rising flood the rising lotus flower its stem unwinds; The dignity of men is measured by their minds.
குறள்:596 உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

Whate'er you ponder, let your aim be loftly still, Fate cannot hinder always, thwart you as it will.
குறள்:597 சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

The men of lofty mind quail not in ruin's fateful hour, The elephant retains his dignity mind arrows' deadly shower.
குறள்:598 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

The soulless man can never gain Th' ennobling sense of power with men.
குறள்:599 பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.

Huge bulk of elephant with pointed tusk all armed, When tiger threatens shrinks away alarmed!.
குறள்:600 உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.

Firmness of soul in man is real excellance; Others are trees, their human form a mere pretence.