அதிகாரம்: கண்ணோட்டம்
Benignity - Kannottam
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:575

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.


குறள் விளக்கம்
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Kannirku Anikalam Kannottam Aqdhindrel Punnendru Unarap Patum

TRANSLATION:
Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face.

MEANING IN ENGLISH:
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
கண்ணோட்டம் - MORE KURAL..
குறள்:571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides.
குறள்:572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.

The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear.
குறள்:573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

Where not accordant with the song, what use of sounding chords? What gain of eye that no benignant light affords?.
குறள்:574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

The seeming eye of face gives no expressive light, When not with duly meted kindness bright.
குறள்:575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face.
குறள்:576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.

Whose eyes 'neath brow infixed diffuse no ray Of grace; like tree in earth infixed are they.
குறள்:577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benign.
குறள்:578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.

Who can benignant smile, yet leave no work undone; By them as very own may all the earth be won.
குறள்:579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace.
குறள்:580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

They drink with smiling grace, though poison interfused they see, Who seek the praise of all-esteemed courtesy.