அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
Absence of Terrorism - Veruvandhaseyyaamai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:566

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.


குறள் விளக்கம்
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும். '(வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ்சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)

TRANSLITERATION:
Katunjollan Kannilan Aayin Netunjelvam Neetindri Aange Ketum

TRANSLATION:
The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die.

MEANING IN ENGLISH:
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.
வெருவந்தசெய்யாமை - MORE KURAL..
குறள்:562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

For length of days with still increasing joys on Heav'n who call, Should raise the rod with brow severe, but let it gently fall.
குறள்:563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

Where subjects dread of cruel wrongs endure, Ruin to unjust king is swift and sure.
குறள்:564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

'Ah! cruel is our king', where subjects sadly say, His age shall dwindle, swift his joy of life decay.
குறள்:565 அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

Whom subjects scarce may see, of harsh forbidding countenance; His ample wealth shall waste, blasted by demon's glance.
குறள்:566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.

The tyrant, harsh in speach and hard of eye, His ample joy, swift fading, soon shall die.
குறள்:567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

Harsh words and punishments severe beyond the right, Are file that wears away the monarch's conquering might.
குறள்:568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

Who leaves the work to those around, and thinks of it no more; If he in wrathful mood reprove, his prosperous days are o'er!.
குறள்:569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

Who builds no fort whence he may foe defy, In time of war shall fear and swiftly die.
குறள்:570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

Tyrants with fools their counsels share: Earth can no heavier burthen bear!.