அதிகாரம்: கொடுங்கோன்மை
The Cruel Sceptre - Kotungonmai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:559

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.


குறள் விளக்கம்
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)

TRANSLITERATION:
Muraikoti Mannavan Seyyin Uraikoti Ollaadhu Vaanam Peyal

TRANSLATION:
Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain.

MEANING IN ENGLISH:
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
கொடுங்கோன்மை - MORE KURAL..
குறள்:551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.

Than one who plies the murderer's trade, more cruel is the king Who all injustice works, his subjects harassing
குறள்:552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

As 'Give' the robber cries with lance uplift, So kings with sceptred hand implore a gift.
குறள்:553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.

Who makes no daily search for wrongs, nor justly rules, that king Doth day by day his realm to ruin bring.
குறள்:555 அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

His people's tears of sorrow past endurance, are not they Sharp instruments to wear the monarch's wealth away?.
குறள்:556 மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

To rulers' rule stability is sceptre right; When this is not, quenched is the rulers' light.
குறள்:557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

As lack of rain to thirsty lands beneath, Is lack of grace in kings to all that breathe.
குறள்:558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

To poverty it adds a sharper sting, To live beneath the sway of unjust king.
குறள்:559 முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

Where king from right deflecting, makes unrighteous gain, The seasons change, the clouds pour down no rain.
குறள்:560 ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

Where guardian guardeth not, udder of kine grows dry, And Brahmans' sacred lore will all forgotten lie.