அதிகாரம்: செங்கோன்மை
The Right Sceptre - Sengonmai
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:549

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.


குறள் விளக்கம்
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான். (துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.)

TRANSLITERATION:
Kutipurang Kaaththompik Kutram Katidhal Vatuvandru Vendhan Thozhil

TRANSLATION:
Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings.

MEANING IN ENGLISH:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
செங்கோன்மை - MORE KURAL..
குறள்:541 ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.

Search out, to no one favour show; with heart that justice loves Consult, then act; this is the rule that right approves.
குறள்:542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.

All earth looks up to heav'n whence raindrops fall; All subjects look to king that ruleth all.
குறள்:543 அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

Learning and virtue of the sages spring, From all-controlling sceptre of the king.
குறள்:545 இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.

Where king, who righteous laws regards, the sceptre wields, There fall the showers, there rich abundance crowns the fields.
குறள்:546 வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

Not lance gives kings the victory, But sceptre swayed with equity.
குறள்:547 இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

The king all the whole realm of earth protects; And justice guards the king who right respects.
குறள்:548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

Hard of access, nought searching out, with partial hand The king who rules, shall sink and perish from the land.
குறள்:549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

Abroad to guard, at home to punish, brings No just reproach; 'tis work assigned to kings.
குறள்:550 கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

By punishment of death the cruel to restrain, Is as when farmer frees from weeds the tender grain.