அதிகாரம்: தெரிந்துவினையாடல்
Selection and Employment - Therindhuvinaiyaatal
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.


குறள் விளக்கம்
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)

TRANSLITERATION:
Seyvaanai Naati Vinainaatik Kaalaththotu Eydha Unarndhu Seyal

TRANSLATION:
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed.

MEANING IN ENGLISH:
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
தெரிந்துவினையாடல் - MORE KURAL..
குறள்:512 வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

Who swells the revenues, spreads plenty o'er the land, Seeks out what hinders progress, his the workman's hand.
குறள்:513 அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.

A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted be.
குறள்:514 எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

Even when tests of every kind are multiplied, Full many a man proves otherwise, by action tried!.
குறள்:515 அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

No specious fav'rite should the king's commission bear, But he that knows, and work performs with patient care.
குறள்:516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?' Of hour befitting both assured, let every work proceed.
குறள்:517 இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

'This man, this work shall thus work out,' let thoughtful king command; Then leave the matter wholly in his servant's hand.
குறள்:518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

As each man's special aptitude is known, Bid each man make that special work his own.
குறள்:519 வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.

Fortune deserts the king who ill can bear, Informal friendly ways of men his tolls who share.
குறள்:520 நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

Let king search out his servants' deeds each day; When these do right, the world goes rightly on its way.