அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்
Seeking the Aid of Great Men - Periyaaraith Thunaikkotal
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:449

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.


குறள் விளக்கம்
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை. (முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

TRANSLITERATION:
Mudhalilaarkku Oodhiya Millai Madhalaiyaanjjch Aarpilaark Killai Nilai

TRANSLATION:
Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.

MEANING IN ENGLISH:
The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
பெரியாரைத் துணைக்கோடல் - MORE KURAL..
குறள்:441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.

As friends the men who virtue know, and riper wisdom share, Their worth weighed well, the king should choose with care.
குறள்:442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

Cherish the all-accomplished men as friends, Whose skill the present ill removes, from coming ill defend
குறள்:443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

To cherish men of mighty soul, and make them all their own, Of kingly treasures rare, as rarest gift is known.
குறள்:445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

The king, since counsellors are monarch's eyes, Should counsellors select with counsel wise.
குறள்:446 தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

The king, who knows to live with worthy men allied, Has nought to fear from any foeman's pride.
குறள்:447 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

What power can work his fall, who faithful ministers Employs, that thunder out reproaches when he errs.
குறள்:448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

The king with none to censure him, bereft of safeguards all, Though none his ruin work, shall surely ruined fall.
குறள்:449 முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

Who owns no principal, can have no gain of usury; Who lacks support of friends, knows no stability.
குறள்:450 பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

Than hate of many foes incurred, works greater woe Ten-fold, of worthy men the friendship to forego.