அதிகாரம்: இறைமாட்சி
The Greatness of a King - Iraimaatchi
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.


குறள் விளக்கம்
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம்.வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.)

TRANSLITERATION:
Pataikuti Koozhamaichchu Natparan Aarum Utaiyaan Arasarul Eru

TRANSLATION:
An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.

MEANING IN ENGLISH:
He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
இறைமாட்சி - MORE KURAL..
குறள்:381 படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kings.
குறள்:382 அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore.
குறள்:383 தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.

A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong.
குறள்:384 அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintains.
குறள்:385 இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expends.
குறள்:386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swells.
குறள்:387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his command.
குறள்:388 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reigns.
குறள்:389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secure.
குறள்:390 கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings reveal.