அதிகாரம்: ஊழ்
Fate - Oozh
குறள் இயல்: ஊழியல்
Fate - Oozhiyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:380

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.


குறள் விளக்கம்
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் , தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Oozhir Peruvali Yaavula Matrondru Soozhinun Thaanmun Thurum

TRANSLATION:
What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still.

MEANING IN ENGLISH:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).
ஊழ் - MORE KURAL..
குறள்:371 ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs.
குறள்:372 பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom bless.
குறள்:373 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy.
குறள்:374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

Two fold the fashion of the world: some live in fortune's light; While other some have souls in wisdom's radiance bright.
குறள்:376 பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

Things not your own will yield no good, howe'er you guard with pain; Your own, howe'er you scatter them abroad, will yours remain.
குறள்:377 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be.
குறள்:378 துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spare.
குறள்:379 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

When good things come, men view them all as gain; When evils come, why then should they complain?.
குறள்:380 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand still.