அதிகாரம்: துறவு
Renunciation - Thuravu
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:345

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.


குறள் விளக்கம்
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? ('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal Utraarkku Utampum Mikai

TRANSLATION:
To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?.

MEANING IN ENGLISH:
What means the addition of other things those who are attempting to cut off (future) births, when even their body is too much (for them).
துறவு - MORE KURAL..
குறள்:341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

From whatever, aye, whatever, man gets free, From what, aye, from that, no more of pain hath he!.
குறள்:342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
குறள்:343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

'Perceptions of the five' must all expire;- Relinquished in its order each desire.
குறள்:344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

'Privation absolute' is penance true; 'Possession' brings bewilderment anew.
குறள்:345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.

To those who sev'rance seek from being's varied strife, Flesh is burthen sore; what then other bonds of life?.
குறள்:346 யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

Who kills conceit that utters 'I' and 'mine', Shall enter realms above the powers divine.
குறள்:347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

Who cling to things that cling and eager clasp, Griefs cling to them with unrelaxing grasp.
குறள்:348 தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

Who thoroughly 'renounce' on highest height are set; The rest bewildered, lie entangled in the net
குறள்:349 பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

When that which clings falls off, severed is being's tie; All else will then be seen as instability.
குறள்:350 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, Cling to that bond, to get thee free from every clinging thing.