அதிகாரம்: கொல்லாமை
Not killing - Kollaamai
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:321

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.


குறள் விளக்கம்
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.)

TRANSLITERATION:
Aravinai Yaadhenin Kollaamai Koral Piravinai Ellaan Tharum

TRANSLATION:
What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.

MEANING IN ENGLISH:
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
கொல்லாமை - MORE KURAL..
குறள்:321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

What is the work of virtue? 'Not to kill'; For 'killing' leads to every work of ill.
குறள்:322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

Let those that need partake your meal; guard every-thing that lives; This the chief and sum of lore that hoarded wisdom gives.
குறள்:323 ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

Alone, first of goods things, is 'not to slay'; The second is, no untrue word to say.
குறள்:324 நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

You ask, What is the good and perfect way? 'Tis path of him who studies nought to slay.
குறள்:325 நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

Of those who 'being' dread, and all renounce, the chief are they, Who dreading crime of slaughter, study nought to slay.
குறள்:326 கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

Ev'n death that life devours, their happy days shall spare, Who law, 'Thou shall not kill', uphold with reverent care.
குறள்:327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

Though thine own life for that spared life the price must pay, Take not from aught that lives gift of sweet life away.
குறள்:328 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

Though great the gain of good should seem, the wise Will any gain by staughter won despise.
குறள்:329 கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

Whose trade is 'killing', always vile they show, To minds of them who what is vileness know.
குறள்:330 உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

Who lead a loathed life in bodies sorely pained, Are men, the wise declare, by guilt of slaughter stained.