அதிகாரம்: இன்னாசெய்யாமை
Not doing Evil - Innaaseyyaamai
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:317

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.


குறள் விளக்கம்
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதிருத்தலே நல்லது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
மனத்தான் ஆம் மாணா - மனத்தோடு உளவாகினற் இன்னாத செயல்களை; எஞ்ஞான்றும் யார்க்கும் எனைத்தானும் செய்யாமை தலை - எக்காலத்தும் யாவர்க்கும் சிறிதாயினும் செய்யாமை தலையாய அறம். (ஈண்டு மனத்தான் ஆகாத வழிப் பாவம் இல்லை என்பது பெற்றாம். ஆற்றலுண்டாய காலத்தும் ஆகாமையின். 'எஞ்ஞான்றும்' என்றும் எளியார்க்கும் ஆகாமையின் , 'யார்க்கும்' என்றும், செயல் சிறிதாயினும் பாவம் பெரிதாகலின், 'எனைத்தானும்' என்றும் கூறினார்.)

TRANSLITERATION:
Enaiththaanum Egngnaandrum Yaarkkum Manaththaanaam Maanaasey Yaamai Thalai

TRANSLATION:
To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.

MEANING IN ENGLISH:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.
இன்னாசெய்யாமை - MORE KURAL..
குறள்:311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, No ill to do is fixed decree of men in spirit pure.
குறள்:313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

Though unprovoked thy soul malicious foes should sting, Retaliation wrought inevitable woes will bring.
குறள்:314 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

To punish wrong, with kindly benefits the doers ply; Thus shame their souls; but pass the ill unheeded by.
குறள்:315 அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

From wisdom's vaunted lore what doth the learner gain, If as his own he guard not others' souls from pain?.
குறள்:316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

What his own soul has felt as bitter pain, From making others feel should man abstain.
குறள்:317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

To work no wilful woe, in any wise, through all the days, To any living soul, is virtue's highest praise.
குறள்:318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Whose soul has felt the bitter smart of wrong, how can He wrongs inflict on ever-living soul of man?.
குறள்:319 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

If, ere the noontide, you to others evil do, Before the eventide will evil visit you.
குறள்:320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

O'er every evil-doer evil broodeth still; He evil shuns who freedom seeks from ill.