அதிகாரம்: வெகுளாமை
Restraining Anger - Vekulaamai
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:308

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.


குறள் விளக்கம்
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Inareri Thoivanna Innaa Seyinum Punarin Vekulaamai Nandru

TRANSLATION:
Though men should work thee woe, like touch of tongues of fire. 'Tis well if thou canst save thy soul from burning ire.

MEANING IN ENGLISH:
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
வெகுளாமை - MORE KURAL..
குறள்:301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கா.

Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein?.
குறள்:302 செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
குறள்:304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.

Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy?.
குறள்:305 தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slay.
குறள்:306 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.

Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dear.
குறள்:307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing.
குறள்:308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

Though men should work thee woe, like touch of tongues of fire. 'Tis well if thou canst save thy soul from burning ire.
குறள்:309 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desires.
குறள்:310 இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they.